February 10, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு முழுவதும் திடீர் மின்சார தடை : காரணம் என்ன?

நாடு முழுவதும் திடீர் மின்சார தடை ஏற்பட்டுள்ளது.

பிரதான மின்விநியோகக் கட்டமைப்பில் இன்று முற்பகல் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

பாணந்துறை உப மின் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளறு இந்த மின்தடைக்கு காணரமாக இருக்கலாம் என்று மின்சார சபை கூறியுள்ளது.

தற்போது மின்சார சபையின் தொழில்நுட்ப பிரிவினர் மின் விநியோகத்தை வழமைக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில்நுட்ப திருத்த பணிகளுக்கு சில மணித்தியாலங்கள் எடுக்கும் என்பதால் பிற்பகலுக்குள் மின்விநியோகம் வழமைக்கு திரும்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.