January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மின்சாரக் கட்டணம் 20 வீதத்தால் குறைப்பு – விபரங்கள் உள்ளே!

மின்சாரக் கட்டணத்தை 20 வீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனவரி 17ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த மின் கட்டண குறைப்பு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி வீடுகள், அரச நிறுவனங்கள், மத வழிபாட்டு இடங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு மொத்தமாக 20 வீதத்தால் மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வீட்டுப் பிரிவின் கீழ், 0-30க்கு இடைப்பட்ட அலகுக்காக அலகொன்றுக்காக இதுவரை அறவிடப்பட்ட 6 ரூபா கட்டணம் 4 ரூபா வரையில் குறைக்கப்படுவதுடன், மாதாந்த நிலையான கட்டணம் 100 ரூபாவில் இருந்து 75 ரூபா வரையில் குறைக்கப்படுகின்றது.

அத்துடன் 31-60க்கு இடைப்பட்ட அலகுக்காக அலகொன்றுக்காக இதுவரை அறவிடப்பட்ட 9 ரூபா கட்டணம் 6 ரூபா வரையிலும் குறைக்கப்படுவதுடன், மாதாந்த நிலையான கட்டணம் 250 ரூபாவில் இருந்து 200 ரூபா வரையில் குறைக்கப்படவுள்ளது.

மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களுக்கான கட்டணம் 21 வீதத்தாலும், அரச நிறுவனங்களுக்கான கட்டணம் 11 வீதத்தாலும், ஹோட்டல்களுக்கான கட்டணம் 31 வீதத்தாலும், தொழிற்சாலைகளுக்கான கட்டணம் 30 வீதத்தாலும், பொது தேவைகளுக்கான கட்டணம் 12 வீதத்தாலும், வீதி விளக்குகளுக்கான கட்டணம் 11 வீதத்தாலும் குறைக்கபடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.