November 16, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி!

பாராளுமன்ற தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களுடன் அமோக வெற்றியைபெற்றுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 788,636 வாக்குகளுடன் 14 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 208,249 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும் பெற்றுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 898,759 வாக்குகளுடன் 16 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 150,445 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது.
களுத்துறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 452,398 வாக்குகளுடன் 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 128,932 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 34,257 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும், இலங்கை தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் 17ஆம் இலக்க சுயேச்சைக்குழு 27,855வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
வன்னி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 29,711 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 21,102 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87,031 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 34,168 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி 96,975 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும் தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 40,139 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

திகமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 146,313 வாக்குகளை பெற்று 4 ஆசனங்களையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 33,911 வாக்குகளை பெற்று ஒரு ஆசனத்தையும் இலங்கை தமிழரசுக் கட்சி 33,632 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
கண்டி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 500,596 வாக்குகளுடன் 9 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 145,939 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 50,889 ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 181,678 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 53,200 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 161,167 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 101,589 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 64,672 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.

குருநாகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 181,678 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 53,200 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
அநுராதபுரம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 331,692 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 98,176 வாக்குகளுடன் 2ஆசனங்களையும் வென்றுள்ளது.
பொலனறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 159,010 வாக்குகளுடன் 4 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 43,822 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் பெற்றுள்ளது.
புத்தளம் மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 239,576 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகளுடன் 2ஆசனங்களையும் வென்றுள்ளது.
மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 317,541 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 74,475 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 406,428 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 93,486 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 31,201 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 234,083 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 52,170 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன 26,268 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளுடன் 6 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளுடன் இரண்டு ஆசனங்களையும் புதிய ஜனநாயக முன்னணி 36,450 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 174,730 வாக்குகளுடன் 5 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 62,014 வாக்குகளுடன் ஒரு ஆசனத்தையும் வென்றுள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 368,229 வாக்குகளுடன் 8 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 133,041 வாக்குகளுடன் 3 ஆசனங்களையும் வென்றுள்ளது.
கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 312,441 வாக்குகளுடன் 7 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 109,691 வாக்குகளுடன் 2 ஆசனங்களையும் வென்றுள்ளது.