January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

விறுவிறுப்பாக நடைபெறும் பாராளுமன்றத் தேர்தல்!

இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்திற்கு உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தேர்தல் தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் நடைபெற்று வருகின்றது.

இந்தத் தேர்தலில் சகல மாவட்டங்களிலும் 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 196 ஆசனங்களுக்காக சகல மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பாக 690 குழுக்களை சேர்ந்த 8,352 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கொழும்பு மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 19 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 966 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,765,351 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் 19 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 17 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 902 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் . தமது பிரதிநிதிகளை தெரிவு செய்யவதற்காக 1,881,129 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

களுத்துறை மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 13 சுயேட்சைக் குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,024,244 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 12 ஆசனங்களுக்காக 12 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 435 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,191,399 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தளை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 184 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 429,991 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 11 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 308 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 605,292 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

காலி மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 264 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 903,163 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மாத்தறை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 220 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 686,175 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் 250 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 520,940 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் , 21 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 593,187 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

வன்னி மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 27 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 459 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 306,081 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் , 22 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 392 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 449,686 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திகாமடுல்ல மாவட்டத்தில் 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் , 42 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 640 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 555,432 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 14 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 217 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 15 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 10 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 396 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 1,417,226 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

புத்தளம் மாவட்டத்தில் 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் , 15 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 429 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 663,673 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அனுராதபுரம் மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் , 9 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 312 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 741,862 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பொலனறுவை மாவட்டத்தில் 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் , 2 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 120 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 351,302 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் , 5 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 240 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 705,772 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில் 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் , 3 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 135 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 399,166 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
இரத்தினப்புரி மாவட்டத்தில் 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் , 7 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 923,736 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.
கேகாலை மாவட்டத்தில் 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் , 4 சுயேட்சைக்குழுக்களின் சார்பாக 216 வேட்பாளர்கள் போட்டியிடுவதுடன் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்காக 709,622 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

பாராளுமன்றத்திற்கு மொத்தமாக தெரிவு செய்யப்படவுள்ள 225 பேரில் மக்களால் வாக்குகளின் மூலம் மாவட்ட ரீதியில் நேரடியாக தெரிவு செய்யப்படும் 196 பேர் தவிர்ந்த மிகுதி 29 பேரும் நாடளாவிய ரீதியில் கட்சிகள் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்திற்கு அமைய தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகவுள்ளனர்.