January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

திரிபோஷா நிறுவனம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட அறிவித்தல்!

ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் என்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தை மூடுவதற்கான எந்தவொரு திட்டமும் இல்லையென நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

ஊட்டச் சத்து குறைபாட்டை தடுக்க குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அரசாங்கத்தால் திரிபோஷா விநியோகிக்கப்படுகின்றது.

இந்நிலையில் ஸ்ரீலங்கா திரிபோஷா லிமிடட் நிறுவனத்தை மூடுவதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தி வந்தார்.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து நிதி அமைச்சு இந்த அறிப்பை வெளியிட்டுள்ளது.

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு திரிபோஷா வழங்கும் திட்டம் மேலும் பயனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிபோஷா நிறுவனத்திற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலம் வலுவான அமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது.