November 21, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெருகும் மக்கள் ஆதரவு: நுவரெலியாவில் வெற்றியை உறுதி செய்யும் தாயக்கட்டை!

தேர்தல்களில் காலம் காலமாக போட்டியிடும் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு மத்தியில் இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் தாயக் கட்டை சின்னத்தில் போட்டியிடும் 11ஆம் இலக்க சுயேச்சைக் குழு தனது வெற்றியை உறுதி செய்துள்ளது.

சட்டத்தரணி சண்முகம் ஹெரோசன் குமார் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் குழுவுக்கு இளைஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் முயற்றியாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் பொது மக்களின் ஆதரவுகள் பெருகி வருகின்றன.

சட்டத்தரணிகள், ஆசிரியர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் இந்த வேட்பாளர்கள் குழுவில் உள்ளதால் அவர்கள் மீதான மக்களின் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன.

தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் மீதோ அல்லது மலையகத்திலுள்ள அரசியல் கட்சிகள் மீதோ எங்களுக்கு நம்பிக்கை கிடையாது. இதனாலேயே எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக களமிறங்க வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது தலைமை வேட்பாளர் சட்டத்தரணி ச.ஹெரோசன் குமார் தெரிவித்துள்ளார்.

225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் 17 அரசியல் கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றனர். அந்த வகையில் நாங்களும் போட்டியிடுகின்றோம். வாக்களர்கள் சரியான முறையில் தமது வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும். எங்களுடையே அணியில் சட்டத்தரணிகள், சமூக செயற்பாட்டாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் உள்ளனர். இவர்களிடையே மூன்று பெண் வேட்பாளர்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இதனால் மக்களுக்கு இது சிறந்த தெரிவு சிறந்த தெரிவாக அமையும். நாங்கள் பாராளுமன்றம் செல்வது உறுதியாகியுள்ளன. மக்களின் ஆதரவு எமக்கு அதிகரித்துள்ளதால் எமது வெற்றி உறுதியாகியுள்ளது என்று சட்டத்தரணி சண்முகம் ஹெரோசன் குமார் தெரிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் மாற்றத்தை விரும்புவதால் இவர்களுக்கான வாக்குகளை மக்கள் உறுதி செய்து வருகின்றனர். கருத்துக் கணிப்புகளில் நுவரெலியா மாவட்டத்தில் தாயக்கட்டை சின்னம் ஏனைய கட்சிகளுக்கு சவாலாக மாறியுள்ளதை அறிய முடிகின்றது.

(வாக்குச் சீட்டில் இறுதியில் இருக்கும் தாயக்கட்டை சின்னத்திற்கு புள்ளடியிட்டு மூன்று விருப்பு வாக்குகளை வழங்கலாம்)