பதுளை, துன்ஹிந்த வீதியில் இன்று காலை பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானத்தில் இருவர் உயிரிழந்தனர்.
கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்திற்குச் சொந்தமான பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த பல்கலைக்கழக மாணவிகள் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 35 பேர் படுகாயமடைந்த நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.