January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு – அரசாங்கம் அறிவித்தது!

அரச ஊழியர்களுக்கு 2025இல் நிச்சயமாக சம்பள அதிகரிப்பு செய்யப்படும் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் எவ்வளவு தொகையால் சம்பள அதிகரிப்பை செய்வது என்பது தொடர்பில் நிதி நிலைமைகளை ஆராய்ந்து முடிவு எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் முதல் அரச ஊழியர்களின் சம்பளத்தை 10ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்க கடந்த அரசாங்கம் தீர்மானம் எடுத்திருந்தது. ஏப்ரல் மாதம் வரையான நிலுவை தொகையை ஒக்டோபர் மாதம் முதல் வழங்கப்படும் எனக் கூறியது. ஏப்ரல் மாதம் முதல் 10ஆயிரம் ரூபா கிடைக்கப்பெற்றது. ஆனால், நிலுவை தொகையை வழங்க தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருக்கவில்லை.

இதற்கிடையில், 2024 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, பொது சேவை வாழ்க்கைச் செலவு கொடுப்பனவுகள் மற்றும் விதவை மற்றும் அனாதை ஓய்வூதிய பங்களிப்புகளை சேகரிப்பதில் திருத்தம் செய்து ஜனவரி 10, 2024 அன்று ஒரு சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.

ஜனவரி முதல் மார்ச் மாதம் வரையான நிலுவை தொகையை 2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை மாதத்திற்கு 5000 ரூபா வீதம் நிலுவைத் தொகையை வழங்குவது என்ன என்பது சுற்றறிக்கையில் தெளிவாக உள்ளது.

இதன்படி எதிர்வரும் ஜனவரி முதல் நிலுவை தொகையை வழங்க நடவடிக்கை எடுப்போம் என்பதுடன், சம்பள அதிகரிப்பை வழங்கவும் நடவடிக்கை எடுப்போம் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.