January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தகவல் திருட்டுகள்: வட்ஸ்அப் பாவனையாளர்களுக்கு அவசர அறிவித்தல்!

சமூக ஊடகங்கள் மற்றும் வட்ஸ்அப் போன்ற தொடர்பாடல் வலையமைப்புகளில் வரும் போலிச் செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இலங்கை கணினி அவசர தயார்நிலைக் குழு (CERT) பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

வங்கிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் சர்வதேச அமைப்புகள் உட்பட நம்பகமான நிறுவனங்களைப் போன்று தனிப்பட்ட மற்றும் நிதித் தகவல்களை மோசடியாகப் பெறும் வகையில் குறித்த செய்திகள் வடிவமைக்கப்படுகின்றன.

இந்தச் செய்திகள் நன்கொடைகள், பண வெகுமதிகள், பெறுமதியான பொருட்கள் அல்லது சேவைகள் தொடர்பில் அறிவித்து மோசடிகளில் சில திட்டமிட்ட கும்பல்கள் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவ்வாறு வட்ஸ்அப் போன்ற தொடர்பாடல் வலையமைப்புகளில் வரும் போலிச் செய்திகள் மற்றும் இணைப்புகள் தொடர்பில் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.