கொழும்பு கோட்டையில் இருந்து காங்கேசன் துறை வரையான புகையிரத சேவை இன்று (28) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
மஹவ மற்றும் அனுராதபுரம் வரையான புகையிரதப் பாதை புனரமைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பகுதியூடான ரயில் சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.
புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தினமும் வடக்கு புகையிரதப் பாதையில் புகையிரதம் பயணிக்கும் என்றும், புகையிரதக் கடவைகளைப் பயன்படுத்தும் பொதுமக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் புகையிரதத் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
அந்தப் புகையிரத நேர அட்டவணைக்கு அமைய,
* கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 12.38 க்கு திருகோணமலையை சென்றடையும்.
* பிற்பகல் 1.30 க்கு திருகோணமலையில் இருந்து புறப்படும் புகையிரதம் இரவு 7.59 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
* கொழும்பு கோட்டையில் இருந்து காலை 6.05 க்கு புறப்படும் புகையிரதம் பிற்பகல் 3.15 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.
* கொழும்பு கோட்டையில் இருந்து பிற்பகல் 3.15 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 10.22 க்கு மட்டக்களப்பை சென்றடையும்.
* மட்டக்களப்பில் இருந்து பிற்பகல் 1.40 புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.
* மட்டக்களப்பில் இருந்து இரவு 6.10 க்கு புறப்படும் புகையிரதம் இரவு 8.55 க்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தை வந்தடையும்.