பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமையவுள்ள புதிய அரசாங்கத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி இணையும் என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.
தமிழரசுக் கட்சியை தனது அரசாங்கத்தில் இணைப்பது தொடர்பில் ஜனாதிபதி இணக்கப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளதாக தனக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சுமந்திரனுக்கு வெளிவிவகார அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளது எனவும் தகவல் கிடைத்துள்ளதாகவும் இது உண்மையா பொய்யா என்பதனை ஜனாதிபதித்தான் கூற வேண்டும் என்றார்.