
முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றிருந்த போதே அவர் கைதாகியுள்ளார்.
அண்மையில் கொழும்பு ஹில்டன் ஹோட்டல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட அதி சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.