May 24, 2025 18:40:13

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”நீங்கள் உங்கள் வேலைகளை பாருங்கள் அரசியலை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்”

தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்டத்தின் வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வைத்தியர்கள், சட்டத்தரணிகள் மற்றும் ஆசிரியர்கள் போன்ற தொழிற்துறைகளை சார்ந்த பலர் போட்டியிடுவதாகவும், அவர்களுக்கு அரசியல் பொருத்தமற்றது என்றும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ் முற்போக்கு கூட்டணியில் நுவரெலியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தனக்கும் ஏனைய வேட்பாளர்களுக்கும் அரசியலில் நல்ல புரிதலும் அனுபவமும் உள்ளது என்றும், மற்றைய கட்சிகளில் இருப்பவர்கள் அவ்வாறான அனுபவம் கொண்டவர்கள் அல்லவெனவும் திகாம்பரம் கூறியுள்ளார்.