முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இம்மாதம் 17ஆம் திகதி நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்றவுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் மற்றும் தனது எதிர்காலத் திட்டங்களை குறித்து ரணில் விக்கிரமசிங்க இதன்போது குறிப்பிடவுள்ளதாக தெரிவிக்கப்படுடுகின்றது.
பொதுத் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தேசிய பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு வருவதில்லை எனவும் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ள போதும், தேர்தலில் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணிக்கு தலைமை தாங்கி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.