January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”யாழில் 6 ஆசனங்களையும் நாங்களே கைப்பற்றுவோம்”

பாராளுமன்றத் தேர்தலில் யாழ். மாவட்டத்தில் ஆறு ஆசனங்களையும் நாங்களே கைப்பற்றுவோம் என்று சுயேட்சை குழு 17 இன் முதன்மை வேட்பாளர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுகம் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

“எங்களுடைய அரசியல் பயணம் ஏழைகளுக்கான அரசியல் பயணமாக இருக்கும். மக்களின் தேவைக்காக ஆளுமை மிக்கவர்களை ஒன்றிணைந்து, பாதை மாறி போகும் தமிழ் தேசியத்தை சரியான பாதைக்கு கொண்டு வருவோம். தமிழ் தேசியம் பேசும் போலி தேசியவாதிகளை இனம் கண்டுள்ளோம். அதனால் சமூக பொறுப்புள்ள துடிப்புள்ள இளையோரை நாடாளுமன்றத்துக்கு கொண்டு செல்ல வேண்டும். எனவே தமிழ் மக்கள் மிக சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.