அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது.
பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் அரசாங்கத்தினால் இது தொடர்பில் உள்ளூராட்சித் தேர்தல் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
இதேவேளை ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டுள்ள உள்ளூராட்சி தேர்தல் வேட்பு மனுக்களின் அடிப்படையில் தேர்தலை நடத்துவது சிக்கலாக இருக்கும் என்றும் இதனால் பாராளுமன்றத்தில் உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய வேட்பு மனுக்களுடன் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ள வேட்பாளர்களில் சிலர் இறந்துவிட்டனர், சிலர் வெளிநாடு சென்றுவிட்டனர். மேலும் சிலர் கட்சி மாறிவிட்டனர். இதனால் நியாயமான முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென்றால் புதிய வேட்பு மனுக்களின் கீழேயே தேர்தலை நடத்த வேண்டியுள்ளது.