நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் அனுமதியின்றியே அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் தீர்மானங்களை எடுத்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் விஜித ஹேரத் இதனை கூறியுள்ளார்.
எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பை செய்வதாக ரணில் அரசாங்கம் அறிவித்த போதும், அதற்கு நிதி அமைச்சியிடமிருந்து எந்தவொரு அறிக்கையும் கோரப்படவில்லை. சம்பள அதிகரிப்பு தொடர்பில் நிதி அமைச்சின் அதிகாரிகள் மற்றும் செயலாளர்கள் இப்போது கூறுவதுபடி அதற்கு நிதி அமைச்சினால் அனுமதியும் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் நாட்டின் நிதி நிலவரம் குறித்தும் ஆராயமலேயே முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனை அரச ஊழியர்கள் புரிந்துகொள்ள வேண்டும். மக்களை ஏமாற்றும் வகையிலேயே அப்போது தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
ஆனால் தமது அரசாங்கத்தின் பக்கத்தில் எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் அதனை நிறைவேற்ற முடியுமா? என்பது தொடர்பில் ஆராய்ந்து நிதி நிலைமைகளை பொறுத்து தீர்மானங்கள் எடுக்கப்படும் என அமைச்சர் விஜித ஹேரத் கூறியுள்ளார்.