January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வரி மோசடி: அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு சிறைத்தண்டனை!

மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸ் உள்ளிட்ட மூவருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் 6 மாத கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய 3.5 பில்லியன் ரூபா வற் வரியை மோசடி செய்தமை தொடர்பில் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினால் இது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

வழக்கின் தீர்ப்பை இன்று அறிவித்த கொழும்பு நீதவான் நீதிமன்றினால் 06 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தமக்கு வழங்கப்பட்ட ஆறு மாத கால சிறைத் தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி டபிள்யு.எம்.மெண்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்டவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.