January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

196 ஆசனங்களுக்காக 8388 வேட்பாளர்கள் களத்தில்!

நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் 196 ஆசனங்களுக்காக 22 தேர்தல் மாவட்டங்களிலும் 690 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை குழுக்களை சேர்ந்த 8388 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வேட்பு மனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகலுடன் நிறைவடைந்தது.

பாராளுமன்றத்தில் 225 ஆசனங்களுக்காக 196 பேர் மக்களின் வாக்குகளால் தெரிவு செய்யப்படுவர். ஏனைய 29 பேர் அரசியல் கட்சிகள் நாடளாவிய ரீதியில் பெற்றுக்கொள்ளும் வாக்கு விகிதாசாரத்திற்கு ஏற்ப தேசியப் பட்டியல் ஊடாக தெரிவு செய்யப்படவுள்ளனர்.

இதன்படி அதிக வேட்பாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே போட்டியிடுகின்றனர். இந்த மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 27 கட்சிகள் மற்றும் 19 சுயேச்சைக் குழுக்களை சேர்ந்த 966 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்துக்கே அதிக ஆசனங்கள் ஒதுக்கப்படும். அவற்றின் எண்ணிக்கை 19 ஆகும். இந்த 19 ஆசனங்களுக்காக இம்முறை தேர்தலில் 24 அரசியல் கட்சிகள் மற்றும் 17 சுயாதீன குழுக்கள் ஊடாக 902 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர்.

குருணாகல் மாவட்டத்துக்கு 15 ஆசனங்கள் ஒதுக்கப்படும். அதற்காக 18 அரசியல் கட்சிகள், 9 சுயாதீன குழுக்கள் ஊடாக 486 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

கண்டி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 12 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 12 சுயாதீன குழுக்கள் ஊடாக 510 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

களுத்துறை மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 13 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இரத்தினபுரி மாவட்டத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ள 11 ஆசனங்களுக்காக 18 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்கள் ஊடாக 350 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

காலி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் சார்பிலும், 5 சுயாதீன குழுக்கள் ஊடாகவும் 264 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

அநுராதபுரம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 312 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 5 சுயாதீன குழுக்களிலிருந்து 240 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். கேகாலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 9 ஆசனங்களுக்காக 14 அரசியல் கட்சிகள் மற்றும் 4 சுயாதீன குழுக்களிலிருந்து 216 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 11 சுயாதீன குழுக்களிலிருந்து 308 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

புத்தளம் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 8 ஆசனங்களுக்காக 24 அரசியல் கட்சிகள் மற்றும் 15 சுயாதீன குழுக்களிலிருந்து 429 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மாத்தறை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 15 அரசியல் கட்சிகள் மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 220 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அம்பாந்தோட்டை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்கு 16 அரசியல் கட்சிகள் மற்றும் 9 சுயாதீன குழுக்களிலிருந்து 250 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

திகாமடுல்லைக்கு ஒதுக்கப்பட்டுள்ள 7 ஆசனங்களுக்காக 22 அரசியல் கட்சிகள் மற்றும் 42 சுயாதீன குழுக்களிலிருந்து 640 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இம்முறை பொதுத் தேர்தலில் அதிக கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் இந்த மாவட்டத்திலேயே களமிறங்க முன்வந்துள்ளன. யாழ்ப்பாணத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 23 அரசியல் கட்சிகள் மற்றும் 21 சுயாதீன குழுக்களிலிருந்து 396 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர்.

வன்னி தேர்தல் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்கு 24 அரசியல் கட்சிகள் மற்றும் 27 சுயாதீன குழுக்களிலிருந்து 459 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மாத்தளை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 16 அரசியல் கட்சிகள்மற்றும் 7 சுயாதீன குழுக்களிலிருந்து 184 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

மட்டக்களப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 27 அரசியல் கட்சிகள் மற்றும் 22 சுயாதீன குழுக்களிலிருந்து 392 வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். திருகோணமலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 4 ஆசனங்களுக்காக 17 அரசியல் கட்சிகள் மற்றும் 14 சுயாதீன குழுக்களிலிருந்து 217 வேட்பாளர்கள் களமிங்குகின்றனர்.

மொனராகலை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆசனங்களுக்காக 12 அரசியல் கட்சிகள் மற்றும் 3 சுயாதீன குழுக்களிலிருந்து 135 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். பொலன்னறுவை மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5 ஆசனங்களுக்காக 13 அரசியல் கட்சிகள் மற்றும் 2 சுயாதீன குழுக்களிலிருந்து 120 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். அதற்கமைய மொனராகலை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலேயே குறைந்தளவான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.