January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போட்டியில் இருந்து விலகிய 50க்கும் மேற்பட்ட முன்னாள் எம்.பிக்கள்!

நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சிரேஷ்ட அரசியல்வாதிகள் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வேட்பாளர்களாக போட்டியிடாமல் இருப்பதற்கு தீர்மானித்துள்ளனர்.

கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி, ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, தேசிய சுதந்திர முன்னணி உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த பலர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடவில்லை.

அத்துடன் சமல் ராஜபக்‌ஷ, பஸில் ராஜபக்‌ஷ, நாமல் ராஜபக்‌ஷ, முன்னாள் எதிர்க்கட்சி பிரதம கொரடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, முன்னாள் இராஜங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, விமலவீர திஸாநாயக்க, லொஹான் ரத்வத்த, முன்னாள் அமைச்சர்களான பந்துலகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க, சிசிர ஜயகொடி, விமல் வீரவன்ச, சம்பிக்க ரணவக்க, காமினி லொக்குகே, டளஸ் அழகப்பெரும, கனக ஹேரத், எஸ்.பி.திஸாநாயக்க, ஷான் விஜேலால், சனத் பிரதீப், டீ.ஜே.செனவிரட்ன, வாசுதேவ நாணயக்கார, பிரியங்கர ஜயரட்ன, ஜனக பண்டார தென்னக்கோன், ஜயந்த கெடகொட, நாலக கொடஹேவா, திஸ்ஸ குட்டியராச்சி, சரத் கீர்த்திரத்ன, சரத் பொன்சேகா, நஸீர் அஹமட், அலிசாகீர் மௌலானா , சீ.வி.விக்னேஸ்வரன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வியாழேந்திரன் உள்ளிட்ட பலர் இம்முறை தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிடவில்லை.
இவர்களில் சிலர் தாம் ஆதரவளிக்கும் கட்சிகள் ஊடாக தேசியப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, தமிழ் பொது வேட்பாளராகப் போட்டியிட்ட பாக்கிய செல்வம் அரியநேத்திரனும் இந்தத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கை தமிழரசு கட்சியின் தலைமைப் பதவியிலிருந்து விலகியுள்ளதாக அண்மையில் அறிவிப்பை வெளியிட்ட அதன் சிரேஷ்ட உறுப்பினர் மாவை சேனாதிராஜா எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை.