June 16, 2025 19:17:39

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பின்வாங்கிய வீரவன்ச: தேர்தலில் போட்டியிடாதிருக்க முடிவு!

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் தனது தேசிய சுதந்திர முன்னணி போட்டியிடாது என அதன் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு விரோதமான ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலுக்கு சேவை செய்யும் சில எதிர்க்கட்சிகள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இரண்டாம் கோட்டாபயவாக மாற்ற திட்டமிடுவதாகவும், இதற்கு தாம் இடமளிக்க மாட்டோம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கையொன்றை வெளியிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.