May 14, 2025 6:16:16

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சஜித்தின் கூட்டணியில் இருந்து சம்பிக்க ரணவக்க விலகினார்!

ஐக்கிய மக்கள் சக்தியுடனான கூட்டணியில் இருந்து விலகுவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளார்.

தனது கட்சிக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் வழங்குவது தொடர்பில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் இதனாலேயே கூட்டணியில் இருந்து விலகுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி இம்முறை தேர்தலில் தனது ஐக்கிய குடியரசு முன்னணி போட்டியிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.