January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரஞ்சன் தலைமையில் புதிய கட்சி: பதுளையில் களமிறங்கும் வடிவேல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தலைமையில் ஐக்கிய ஜனநாயக குரல்’ என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஒலிவாங்கி சின்னத்தில் நாடு முழுவதும் இந்தக் கட்சி போட்டியிடவுள்ளது.

கட்சியின் தேசிய அமைப்பாளரான முன்னாள் கிரிக்கெட் வீரர் டி.எம்.டில்சான் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை இந்தக் கட்சியுடன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் இணைந்துகொண்டுள்ளதுடன், இவர் இந்தக் கட்சியின் பதுளை மாவட்ட வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.