January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தாமரை கோபுரத்தில் இருந்து குதித்த மாணவி தொடர்பில் வெளியான தகவல்!

கொழும்பு தாமரை கோபுரத்தின் 29 ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவி குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

தனியார் பாடசாலையொன்றில் கற்கும் கொள்ளுப்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய மாணவியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் பாடசாலை முடிந்து தாமரை கோபுரத்திற்கு சென்று 29 ஆவது மாடியில் இருந்து இந்த மாணவி கீழே குதித்துள்ளதுடன், மேலிருந்து 3ஆவது மாடியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், குறித்த மாணவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட பாடசாலை மாணவன் மற்றும் மாணவியின் தோழி என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

குறித்த நண்பர்கள் இருவரும் உயிரிழந்த சம்பவத்தின் பின்னர் இந்த மாணவி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருந்ததாக அவரது தந்தை பொலிஸில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இது தொடர்பில் மருதானை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.