November 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மகிந்த அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு?

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ அரசியலில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதற்கு தீர்மானித்துள்ளதாக அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் வாரங்களில் தனது கட்சியினருக்கு அவர் தனது ஓய்வு தொடர்பில் அறிவிக்க எதிர்பார்த்துள்ளதாக கூறப்படுகின்றது.

தனது மகனான நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப் பதவியை ஒப்படைத்துவிட்டு அரசியலில் இருந்து அவர் ஓய்வு பெறவுள்ளதாக செய்திகள் வெளியாகின்றன.

இதன்படி எதிர்வரும் பொதுத் தேர்தலில் மகிந்த ராஜபக்‌ஷ போட்டியிட மாட்டார் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது அரசியலில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற தன்மை, தனது உடல் நிலை மற்றும் வயது மூப்பு ஆகிய விடயங்களை கருத்திற்கொண்டும் மற்றும் சம்பிரதாய அரசியலுக்கு எதிராக எழுகின்ற விமர்சனங்களை கருத்திற்கொண்டும் மகிந்த ராஜபக்‌ஷ  இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை மகிந்த ராஜபக்‌ஷவின் சகோதரரான சமல் ராஜபக்‌ஷவும் தனது அரசியல் பயணம் தொடர்பில் முடிவெடுக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.