இலங்கைக்கு தேவையான ஒத்துழைப்புகளை இந்தியா தொடர்ந்தும் வழங்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர், இன்று பிற்பகல் கொழும்பில் ஜனாதிபதி அநுரகுமாரவை சந்தித்த போதே இதனை கூறியுள்ளார்.
இந்த சந்திப்பின்போது, புதிதாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் வாழ்த்துச் செய்திகளை கூறிய ஜெய்சங்கர், கூடிய விரைவில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு அநுரகுமாரவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதேவேளை பிரதமர் ஹரிணி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.