January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

புதிய அரசியலமைப்பு மூலம் இனப் பிரச்சினைக்கு தீர்வு!

பொதுத் தேர்தலில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகள் தொடர்பிலும் 13ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன நிலைப்பாட்டில் இருக்கின்றது என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

”ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து பொதுத் தேர்தலில் அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது. இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது தொடர்பில் எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளோம். புதிய அரசியலமைப்பு மறுசீரமைப்பை மேற்கொண்டு நாட்டு மக்களின் ஆணையுடன் அதனை செயற்படுத்துவது தொடர்பில் எமது கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி புதிய அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர் நாங்கள் அந்த நடவடிக்கைளை ஆரம்ப்போம். அதிலிலிருந்து அதற்கான நுழைவு ஆரம்பமாகும்” என விஜித ஹேரத் கூறியுள்ளார்.