October 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன!

செப்டம்பர் 30 நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 332 ரூபாவாக காணப்பட்ட 92 ரக ஒக்டேன் பெட்ரோல் லீட்டர் ஒன்றின் விலை 21 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 311 ரூபாவாகும்.

அதேபோல், ஒக்டேன் 95 ரக பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.
மேலும், 307 ரூபாவாக காணப்பட்ட ஓட்டோ டீசல் லீற்றரின் விலை 24 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 283 ரூபாவாகும்.

352 ரூபாவாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 லீற்றர் ஒன்றின் விலை 33 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 319 ரூபாவாகும்.

202 ரூபாவாக நிலவிய மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றில் விலை 19 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.