January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

உணர்வெழுச்சியுடன் நடைபெறும் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தியாக தீபம் திலீபனின் 37வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.செல்வகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜோசப்மேரி அடிகளார், தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

தியாக தீபம் திலீபனின் 37ஆவது நினைவேந்தல் முல்லைத்தீவு – கள்ளப்பாடு வடக்குப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.

குறித்த நினைவேந்தல் நிகழ்வானது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரனின் மக்கள் தொடர்பகத்தில் இன்று (26) உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்டது.

அந்தவகையில் மௌன அஞ்சலியுடன் தொடங்கிய இந் நிகழ்வில், தொடர்ந்து தியாகி திலீபனின் உருவப்படத்திற்கு மலர்தூவி, சுடரேற்றி உணர்வெழுச்சியுடன் அஞ்சலி நிகழ்வு மேற்கொள்ளப்பட்டது.