புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான புதிய அமைச்சரவை இன்று பதவியேற்றது.
இதன்போது பிரதமராக ஹரிணி அமரசூரிய நியமிக்கப்பட்டார்.
அவர் பிரதமர் பதவிக்கு மேலதிகமாக நீதி, பொது நிருவாகம், உள்நாட்டு அலுவல்கள், மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சராகவும் கல்வி, விஞ்ஞான தொழில்நுட்ப அமைச்சராகவும் மகளிர், சிறுவர் மற்றும் இளைஞர் விவகாரம், விளையாட்டுத்துறை அமைச்சராகவும் வர்த்தகம், உணவுப் பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சராகவும் மற்றும் சுகாதார அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.
இதேவேளை தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் வெளிவிவகாரம், பொதுமக்கள் பாதுகாப்பு, பௌத்த சாசனம், மத விவகாரங்கள், கலாச்சர நடவடிக்கைகள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு, ஊடகத்துறை, போக்குவரத்து, பெருந்தெருக்கள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுப் பதவிகளை ஏற்றார்.
எவ்வாறாயினும் பாதுகாப்பு, நிதி, பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல், சுற்றுலாத்துறை, வலுச் சக்தி, விவசாயம், காணி, கால்நடை வளங்கள், நீர்ப்பாசம், கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் ஆகிய அமைச்சுக்கள் ஜனாதிபதி வசமாகியுள்ளன.