September 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாடு அநுரவிடம் – ஜனாதிபதியாக பதவியேற்கிறார்!

ஜனாதிபதி தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வேட்பாளர் அநுரகுமார திஸாநாயக்க அமோக வெற்றி பெற்றுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரர் சஜித் பிரேமதாசவை விடவும் 13,600,16 மேலதிக வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த 17,140,354 பேரில் 13,619,916 பேர் வாக்களித்திருந்ததுடன் அவற்றில் 300,300 வாக்குகள் நிராகரிக்கப்பட்டிருந்தன.

இதன்படி வேட்பாளர் ஒருவர் வெற்றிப் பெறுவதற்காக செல்லுபடியான 13,319,616 வாக்குகளில் 66,59,809 வாக்குகளை (50 வீதத்துடன் மேலதிக வாக்கொன்று) பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற நிலையில் எவரும் 50 வீத வாக்குகளை பெற்றுக்கொள்ளவில்லை.

இதனால் இரண்டாம், மூன்றாம் விருப்பத் தெரிவு வாக்குகளை எண்ண வேண்டிய நிலைமை உருவாகியது.

முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது 22 தேர்தல் மாவட்டங்களில் 15 மாவட்டங்களை வெற்றிக்கொண்ட அநுரகுமார திஸாநாயக்க நாடாளவிய ரீதியில் 56,34,915 வாக்குகளை பெற்றுக்கொண்டார்.

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தறை, அம்பாந்தோட்டை, காலி, மொனராகலை, இரத்தினபுரி, கேகாலை, பொலனறுவை, அநுராதபுரம், மாத்தளை, புத்தளம் மற்றும் குருநாகல் ஆகிய 15 மாவட்டங்களில் அநுரகுமார வெற்றிபெற்றுள்ளார்.

அதேவேளை சஜித் பிரேமதாச நாடளாவிய ரீதியில் 43,630,35 வாக்குகளை பெற்றுள்ள சஜித் நுவரெலியா, திகாமடுலை, மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னி, யாழ்ப்பாணம் மற்றும் பதுளை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெற்றிபெற்றுள்ளார்.

இதேவேளை தேர்தலில் நாமல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 2,299,767 வாக்குகளையும், நாமல் ராஜபக்‌ஷ 342,781 வாக்குகளையும், அரியநேத்திரன் 226,342 வாக்குகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.