
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய பல்கலைக்கழகங்களுக்கு 2023/2024 கல்வியாண்டுக்காக பல்கலைக்கழகங்களுக்கு புதிய மாணவர்களை அனுமதிப்பதற்கான வெட்டுப் புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதன்படி இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 45 ஆயிரம் மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் 269,613 பேர் தோற்றியதுடன், பரீட்சை பெறுபேறுகளுக்கமைய 163,444 பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 87,723 பேர் விண்ணப்பத்திருந்த நிலையில் அவர்களில் 45,000 பேர் அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.