September 23, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்க மாவட்டங்கள்!

ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கத் தகுதியுடைய அதிகூடிய வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக கம்பஹா மாவட்டம் விளங்குவதுடன், ஆகக் குறைவான வாக்காளர்களை கொண்ட மாவட்டமாக வன்னி மாவட்டம் விளங்குகின்றது.

2024ஆம் ஆண்டின் வாக்காளர் இடாப்பின்படி இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தேர்தல் தொகுதிகளில் 17,140,354 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் மாவட்ட வாரியாக மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை வருமாறு,

மேல் மாகாணம்
கொழும்பு மாவட்டத்தில் 15 தொகுதிகளில் 1,765,351பேரும், கம்பஹா மாவட்டத்தில் 13 தொகுதிகளில் 1,881,129 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 1,024,244 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மத்திய மாகாணம்
கண்டி மாவட்டத்தில் 13 தொகுதிகளில் 1,191,399 பேரும், மாத்தளை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 429,991 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 605,292 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தென் மாகாணம்
காலி மாவட்டத்தில் 10 தொகுதிகளில் 903,163 பேரும், மாத்தறை மாவட்டத்தில் 7 தொகுதிகளில் 686,175 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வடக்கு மாகாணம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 11 தொகுதிகளில் 593,187 பேரும், வன்னி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 306,081 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

கிழக்கு மாகாணம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 449,686 பேரும்,  திகாமடுலை மாவட்டத்தில் 4 தொகுதிகளில் 555,432 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 315,925 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வட மேல் மாகாணம்
குருநாகல் மாவட்டத்தில் 14 தொகுதிகளில் 1,417,226 பேரும், புத்தளம் மாவட்டத்தில் 5 தொகுதிகளில் 663,673 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வட மத்திய மாகாணம்
அனுராதபுரம் மாவட்டத்தில் 7  தொகுதிகளில் 741,862 பேரும், பொலனறுவை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 351,302 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

ஊவா மாகாணம்
பதுளை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 705,772 பேரும், மொனராகலை மாவட்டத்தில் 3 தொகுதிகளில் 399,166 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

சப்ரகமுவ மாகாணம்
இரத்தினப்புரி மாவட்டத்தில் 8 தொகுதிகளில் 923,736 பேரும், கேகாலை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் 709,622 பேரும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.