April 21, 2025 21:26:47

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதித் தேர்தல்: விறுவிறுப்பாக நடக்கும் வாக்களிப்பு!

வாக்காளர்கள் அனைவரும் சரியான ஆவணங்களுடன் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று, உரிய நேரத்தில் தமது வாக்குகளைப் பதிவு செய்யுமாறு தேர்தல்கள் ஆணையாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்து 40 ஆயிரத்து 352 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நாடு பூராகவுமுள்ள 13,421 தேர்தல் மத்திய நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.

பிற்பகல் 4 மணியளவில் வாக்களிப்புகள் முடிவடைந்த பின்னர் இரவு 7 மணி முதல் வாக்கெண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.