January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பிரசார நடவடிக்கைகள் நிறைவு: அமைதி காலத்தில் சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான பிரசாரங்கள் புதன்கிழமை நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்ததோடு, தேர்தல் நடைபெறும் நேரம் வரையான காலப்பகுதி அமைதி காலமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தக் காலப்பகுதியில் பிரசார செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை 13,421 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு தேவையான அனைத்து அடிப்படை நடவடிக்கைகளும் ஏற்கனவே திட்டமிடப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.

இதேவேளை, வாக்காளர் அட்டைகள் இதுவரை கிடைக்கப்பெறாத மக்கள் அவற்றைப் பெறுவதற்காக தபால் நிலையங்களை சனிக்கிழமையும் திறந்து வைக்க தபால் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

தபால் நிலையங்களில் சுமார் மூன்று இலட்சம் வாக்காளர் அட்டைகள் தேங்கியிருப்பதாக தபால்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.