
அநுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியானதும் அமைக்கப்படும் இடைக்கால அரசாங்கத்தில் பிரதமராக நியமிக்கப்படுபவர் ஒரு பெண்ணாக இருக்கலாம் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் சுட்டிக்காட்டினார்.
மினுவாங்கொடையில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் செப்டெம்பர் 21ஆம் திகதி வெற்றி பெற்றதன் பின்னர் அரசியலமைப்பின் 47 ஆம் சரத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுடன் புதிய அமைச்சரவையொன்று நியமிக்கப்படும் என்றும் அது நான்கு பேரை கொண்ட அமைச்சரவையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் தமது அரசாங்கத்தில் 25 அமைச்சர்களை கொண்டதாக அமைச்சரவை அமைக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.