2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று நடைபெற்றது.
நாடளாவிய ரீதியில் 2,849 பரீட்சை நிலையங்களில் பரீட்சை நடைபெற்ற புலமைப் பரிசில் பரீட்சைக்கு 323,841 பரீட்சார்த்திகள் தோற்றினர்.
இன்றைய பரீட்சையின் போது பிள்ளையொன்றுக்கு ஏதேனும் காரணமோ அல்லது பிரச்சினையோ ஏற்பட்டிருந்தால், பரீட்சை திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை நடைபெற்ற புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் 40 நாட்களுக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.