September 17, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

20ஆம் திகதி பாடசாலைகளுக்கு விடுமுறை!


இலங்கையில் செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலையொட்டி 20ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்குவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதேவேளை தேர்தல் கடமைகள் மற்றும் வாக்குகள் எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு எதிர்வரும் 13ஆம் திகதி முதல் விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.