January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நான்கு இராஜாங்க அமைச்சர்கள் அதிரடியாக பதவி நீக்கம்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நான்கு இராஜாங்க அமைச்சர்களை பதவி நீக்கம் செய்துள்ளார்.

துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர, மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த, விவசாய இராஜாங்க அமைச்சர் மொஹொன் பிரியதர்ஷன டி சில்வா, நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் ஆகியோர் இவ்வாறு பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். 

அரசியலமைப்பின் 47(3) (அ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் அடிப்படையில் இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நால்வரும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்‌ஷவுக்கு ஆதரவளிக்கும் நிலையிலேயே இவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.