செப்டம்பர் 21ஆம் திகதி நடைபெறவுள்ள இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக 39 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இன்று முற்பகல் 9 மணி முதல் 11 மணி வரையில் இராஜகிரியவிலுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சுயேச்சை வேட்பாளராகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும், தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளராக அனுரகுமார திஸாநாயக்கவும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக நாமல் ராஜபக்ஷவும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதேவேளை தமிழ் பொதுக் கட்டமைப்பின் பொது வேட்பாளராக பா.அரியநேந்தினும் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
வேட்பு மனுத் தாக்கல் செய்தோர் விபரங்கள் வருமாறு,
- திலித் சுசந்த ஜயவீர
- சரத் மனமேந்திர
- அபூபக்கர் மொஹமட் இன்பாஸ்
- எஸ். பி. லியனகே
- பானி விஜேசிறிவர்தன
- பிரியந்த புஷ்பகுமார விக்கிரமசிங்க
- அஜந்த டி சொய்சா
- பத்தரமுல்லை சிரலாதன தேரர்
- சரத் பொன்சேகா
- நுவன் சஞ்சீவ போபகே
- ஹிட்டிஹாமிலாகே டொன் ஒஷால லக்மால் அனில் ஹேரத்
- ஜனக பிரியந்த ரத்நாயக்க
- கே.கே.பியதாச
- மயில்வாகனம் திலகராஜா
- சிறிபால அமரசிங்க
- பாக்கியசெல்வம் அரியநேத்திரன்
- சரத் கீர்த்திரத்ன
- கே. ஆனந்த குலரத்ன
- நாமல் ராஜபக்ஷ
- அக்மீமன தயாரதன தேரர்
- கே.ஆர். கிஷான்
- பொல்கம்பொல ராலலாகே சமிந்த அனுருத்த
- விஜயதாச ராஜபக்ஷ
- அனுர சிட்னி ஜயரத்ன
- சிறிதுங்க ஜயசூரிய
- மஹிந்த தேவகே
- மொஹமட் இல்லயாஸ்
- லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஷ
- எண்டனி விக்டர் பெரேரா
- கீர்த்தி விக்கிரமரத்ன
- சஜித் பிரேமதாச
- ரணில் விக்கிரமசிங்க
- மரக்கல மானகே பிரேமசிறி
- லலித் டி சில்வா
- பி. டபிள்யூ. எஸ். கே. பண்டாரநாயக்கா
- டி.எம்.பண்டாரநாயக்க
- அனுரகுமார திஸாநாயக்க
- அகம்பொடி பிரசங்க சுரஞ்சீவ அனோஜ் டி சில்வா
- அனுருத்த ரணசிங்க ஆராச்சிகே ரொஷான்