
ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னத்திலேயே போட்டியிடவுள்ளார்.
இன்று வியாழக்கிழமை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களால் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கான சின்னங்கள் தேர்தல்கள் ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டன.
இதன்போது சுயேச்சை வேட்பாளராக களமிறங்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் சின்னமாக வழங்கப்பட்டுள்ளது.