
இலங்கையர்களுக்கு மூன்று வெவ்வேறு வர்ணங்களில் புதிய அம்சங்களுடனான கடவுச்சீட்டுகளை வழங்கவுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
சாதாரண, உத்தியோகபூர்வ மற்றும் இராஜதந்திரிகளுக்கானவை என்ற அடிப்படையில் மூன்று வர்ணங்களில் குறித்த கடவுச்சீட்டுகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் இந்த புதிய கடவுச்சீட்டுகளை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் டிரான் அலஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.