January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஜனாதிபதித் தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டது!

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும்  செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தலை தற்போது தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஜனாதிபதித் தேர்தல் செப்டம்பர் 21ஆம் திகதி நடக்கவுள்ளதுடன், அதற்கான  வேட்புமனுக்கள் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ராஜகிரிய, சரண மாவத்தையில் அமைந்துள்ள தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தில் வேட்பாளர்கள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய வேண்டிய இடமாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய ஜனாதிபதியின் பதவிக் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.