
இலங்கை முழுவதும் நிலவும் கடும் மழையுடன் கூடிய காலநிலையால் நாளை (23) பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளும் இவ்வாறு மூடப்படவுள்ளதாகவும் பாடசாலைகளை மீளத் திறப்பது தொடர்பில் நிலைமைகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.