
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார்.
இன்று மாலை தனது வீட்டில் வைத்து இவர் மின்சாரத் தாக்குத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகின்றது.
அதன்போது நாகோட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் தெவரப்பெரும உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாலித தெவரப்பெரும ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினராவார்.
அதேபோல மக்கள் சேவைமூலம் அனைவரது ஆதரவையும் பெற்ற அரசியல்வாதியாவார்.