ரணில் விக்கிரமசிங்கவுடன் எவ்வளவு தூரம் பயணிக்க முடியுமோ அது வரையே பயணிப்போம் என்றும், அவருடன் பயணிக்க முடியாத இடத்தில் அந்த பயணத்தில் இருந்து விலகி விடுவோம் என்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளர் ஒருவர் களமிறக்கப்படுவார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே மகிந்த இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்ஷ போட்டியிட மாட்டார் என்றும், அவருக்கு இன்னும் காலம் உள்ளது என்றும் மகிந்த ராஜபக்ஷ இதன்போது கூறியுள்ளார்.