December 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்த முடியுமா?

ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் ஒரே நாளில் நடத்துவது சிக்கலானது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இரு தேர்தல்களையும் ஒரே நாளில் நடத்துவதற்கு திட்டமிடப்படுவதாக வெளியாகும் செய்திகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள், அவ்வாறு தேர்தலை நடத்துவதற்கு தற்போதைய சட்டங்களில் இடமில்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.

தற்போதைய தேர்தல் முறைமைக்கு அமைய ஒரே நாளில் இருந்து தேர்தல்களையும் நடத்துவது சாத்தியமில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதாவது, ஜனாதிபதி தேர்தலுக்கு நாடளாவிய ரீதியில் ஒரே ஒரு உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டு மட்டுமே வழங்கப்படும். எனினும், பொதுத்தேர்தலுக்காக 22 தேர்தல் மாவட்டங்களுக்கு 22 வாக்குச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும் என அந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், ஒரே நேரத்தில் இரண்டு தேர்தல்களை நடத்தி அதில் வாக்களிப்பது குறித்து நாட்டிலுள்ள வாக்காளர்களுக்கு சரியான தெளிவுபடுத்தல் இல்லாமை இதன் முக்கிய பிரச்சினையாக உள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், சில அரசியல் கட்சிகள் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு ஜனாதிபதி ​தேர்தலில் வேறு ஒரு வேட்பாளருக்கு ஆதரவு வழங்கினால் சிக்கல் நிலை உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.