February 24, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கைத்தொலைபேசி விலைகள் பெருமளவில் குறைந்தன!

இலங்கையில் கைத்தொலைபேசி விலைகள் பெருமளவில் குறைவடைந்துள்ளன.

டொலரின் பெறுமதி வீழ்ச்சி காரணமாக கைத்தொலைபேசிகளின் விலை 18 தொடக்கதம் 20 வீதங்களால் குறைவடைந்துள்ளதாக இலங்கை கையடக்க தொலைபேசி இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போது நாட்டில் அமெரிக்க டொலரின் பெறுமதி 300 ரூபா வரை வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த வருடத்தில் டொலர் பெறுமதி அதிகரித்திருந்த போது உயர்வடைந்திருந்த கைத்தொலைபேசி விலைகள் தற்போது மீண்டும் குறைவடைந்துள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் சமித் செனரத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக 515,000 முதல் 530,000 ரூபா வரை காணப்பட்ட ஐபோன் 15 pro max கைத்தொலைபேசி விலை தற்போது 375,000 ரூபா வரை குறைவடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேபோன்று ஏனைய கைத்தொலைப்பேசிகளும் குறைவடைந்துள்ளதாகவும் சமித் செனரத் குறிப்பிட்டுள்ளார்.