
பண்டிகை காலங்களில் ஆடை மற்றும் பொருட்கள் கொள்வனவுக்காக செல்வோர் மோசடியாளர்கள் மற்றும் திருடர்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுடுள்ளனர்.
இதேவேளை போலி நாணயத்தாள்கள் தொடர்பிலும் எச்சரிக்கையுடன் மக்கள் இருக்க வேண்டும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் தமிழ், சிங்கள புத்தாண்டு விடுமுறை காலத்தில் சுற்றுலா செல்பவர்களுக்காகவும் பொலிஸார் விசேட அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளனர்.
பயணம் செய்யும் வாகனங்கள் தனியார் வாகனங்களாகவோ அல்லது பொது வாகனங்களாகவோ இருக்கலாம். தனிப்பட்ட வாகனமாக இருந்தால் உங்கள் வாகனத்தை செலுத்துபவர் மது அருந்தியுள்ளாரா?, அதிவேகமாக பயணிக்கிறாரா?, மற்றும் போக்குவரத்து விதிகளை மீறுகிறாரா? என்பதை அவதானியுங்கள்.
இதேவேளை நெடுஞ்சாலையில் இதுபோன்று நடந்தால் 1969 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவியுங்கள். பொலிஸார் இதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.