
இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களை சேர்ந்த 9 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் போது கடந்த 5ஆம் திகதி இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு, காலி, ராகமை, மொரட்டுவை, பண்டாரகம மற்றும் வாதுவ ஆகிய பகுதிகளில் வசிக்கும் பிரபல குற்றக்கும்பல்களை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
புகுடு கண்ணா, பொடி லெஸ்ஸி, கணேமுல்ல சஞ்சீவ, ஹினடிய சங்க, குடு அஞ்சு, குடு சலிந்து மற்றும் மத்துகம கவரியா உள்ளிட்ட குற்றக்கும்பல்களின் தலைவர்களின் கீழ் செயற்பட்டதாக கூறப்படும் சந்தேக நபர்களே இந்த நடவடிக்கையில் கைதாகியுள்ளதாக கூறப்படுகின்றது.